உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

உடுமலை, ; திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும், 31ம் தேதி, காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கத்தில் நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தைச்சார்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள், இம்முகாமில் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இதில், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை