உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும், 29ம் தேதி நடைபெற உள்ளது.எழுத படிக்க தெரிந்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி முடித்தவர்கள், கம்ப்யூட்டர் இயக்க தெரிந்தோர், டிரைவர், டெய்லர் என அனைத்து விதமான கல்வித்தகுதியுள்ளோரும் பங்கேற்கலாம்.விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை அளிக்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், முகாமில் பங்கேற்க, www.tnprivatejobs.tn.gov.inஎன்கிற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி