உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

உடுமலை; உடுமலையில், வரும் ஆக., 9ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்த குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலவலர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட அலுவலகம் சார்பில், வரும் ஆக., 9ம் தேதி, உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில், காலை, 8:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில், 150 நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல், 10, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து விதமான கல்வித்தகுதி பெற்றவர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அறிந்து கொள்ளவும், https://tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதள முகவரியும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 0421-2999152; 94990 55944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !