மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
உடுமலை; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் விஜயா தலைமை வகித்தார். பள்ளி இலக்கிய மன்ற செயலாளர் தமிழாசிரியர் சின்னராசு வரவேற்றார்.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளி துணை ஆய்வாளர் ரவி மாணவியரை ஊக்குவித்து பேசினர். தமிழாசிரியர் சிவசுந்தரி ஆண்டறிக்கை வாசித்தார்.பள்ளி முதுகலை உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ், பட்டதாரி உதவி தலைமையாசிரியர் மஞ்சுளா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆரிபா முன்னிலை வகித்தனர்.முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ், 'இலக்கிய இன்பம்' என்ற தலைப்பில் பேசினார்.ஆண்டுவிழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியப்போட்டி, நடனம் மற்றும் விளையாட்டுப்போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தொடர்ந்து மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியர் கார்த்திகா நன்றி தெரிவித்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்தனர். பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பங்கேற்றனர்.
27-Jan-2025