உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவியல் போட்டியில் பரிசு; மாணவர்களுக்கு பாராட்டு

அறிவியல் போட்டியில் பரிசு; மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை: தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற குடிமங்கலம், குமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். கர்நாடகா, பெங்களூரில், 'டாடா' பவர் மற்றும் அகஸ்திய சர்வதேச அறக்கட்டளை சார்பில் தேசிய அளவிலான அறிவியல் போட்டியில், 8 மாநிலங்களை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அறிவியல் மாதிரி தயாரிப்பு, போஸ்டர் தயாரிப்பு மற்றும் வினா-விடை போட்டியில், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள் பரிசு பெற்று அசத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் பாரத்குமார் குழந்தைகளை வழிநடத்திச்சென்றார். பரிசு பெற்ற மாணவர்களை, தலைமையாசிரியர்கள் பழனிசாமி, மாரியப்பன் மற்றும் குடிமங்கலம், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ