உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணித திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பரிசு

கணித திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பரிசு

உடுமலை, ;தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், கடந்த ஜன., மாதம் உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், கணித திறனறித்தேர்வு நடந்தது.இத்தேர்வில், உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, 500க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. பூலாங்கிணர் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி தலைமை வகித்தார்.அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ், உறுப்பினர் பாலமுருகன், விவேகானந்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.பேராசிரியர் லெனின்பாரதி, இந்தியா விண்வெளித்துறையில், 50 ஆண்டுகள் செய்த சாதனைகள் குறித்து பேசினார். தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய், மூன்றாமிடம் பெற்றவருக்கு 500 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, உடுமலை தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கண்ணபிரான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி