உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செம்மொழி நாள் போட்டி  வெற்றியாளர்களுக்கு பரிசு

செம்மொழி நாள் போட்டி  வெற்றியாளர்களுக்கு பரிசு

திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த செம்மொழி நாள் பேச்சுப்போட்டியில், தாராபுரம் கல்லுாரி மாணவரும், கட்டுரைப்போட்டியில் குமரன் கல்லுாரி மாணவியும் முதல் பரிசு பெற்றனர்.தமிழக அரசு சார்பில், ஜூன் 3 ம் தேதி செம்மொழி நாள் விழா கொண்டாடப்படுகிறது. கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கல்லுாரி மாணவருக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி, எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நடந்தது. போட்டி ஏற்பாடுகளை, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.பேச்சுப்போட்டியில், தாராபுரம் அரசு கலைக்கல்லுாரி மாணவன் பூபதி முதல் பரிசு பெற்றார். சிக்கண்ணா கல்லுாரி மாணவர் நாகராஜ் இரண்டாம் பரிசும், உடுமலை வித்யாசாகர் கல்லுாரி மாணவி பரணிப்பிரியா மூன்றாம் பரிசும் பெற்றனர்கட்டுரை போட்டியில், திருப்பூர் குமரன் கல்லுாரி மாணவி அமுதா முதல்பரிசும், உடுமலை அரசு கல்லுாரி மாணவி சத்யா இரண்டாம் பரிசும், எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவி சிவனிதா மூன்றாம் பரிசும் பெற்றனர்.முதல் பரிசு பெற்றவருக்கு, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக, 5000 ரூபாயும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற, ஆறு பேருக்கு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ