உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிக்னல் இல்லாததால் சிக்கல்

சிக்னல் இல்லாததால் சிக்கல்

திருப்பூர் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை அகற்றி விட்டு, தேவையான பகுதிகளில் யு டர்ன் நடைமுறையை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த நடைமுறை காரணமாக சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவதி வாகன ஓட்டிகளுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், இது புதிய நடைமுறை என்பதால், யு டர்ன் இடங்களில் சில நடைமுறைச்சிக்கல்களும் தொடர்ந்து காணப்படுகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக, புஷ்பா சந்திப்பு பகுதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் நடைமுறை கைவிடப்பட்டு, மாற்று திட்டப்படி வாகனங்கள் சென்று திரும்புகின்றன. அவ்வகையில், தற்போது சிக்னல் நெருக்கடி மாறி விட்டது. இருப்பினும் வேறு வகையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. காலேஜ் ரோடு - அவிநாசி ரோடு இணையும் பகுதியில் நோ சிக்னல் காரணமாக போலீசார் கண்காணிப்பு குறிப்பிடும் வகையில் இல்லை. இதனால், அப்பகுதிக்கு வருவோர் தங்கள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர். அடுத்தடுத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. இந்த இடம் 'நோ பார்க்கிங்' பகுதியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டும் உள்ளது. நோ சிக்னல் பகுதியில் தேவையான இடங்களில் நோ பார்க்கிங் நடைமுறையையும் போலீசார் பின்பற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !