உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாட்டுப்பால் லிட்டர் ரூ.45 உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

 மாட்டுப்பால் லிட்டர் ரூ.45 உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

திருப்பூர்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், திருப்பூர் மாவட்ட மாநாடு, செங்கப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் கொளந்தசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் மதுசூதனன், தமிழ்நாடு தென்னை விவசாய சங்க மாவட்ட செயலாளர் பரமசிவம் ஆகியோர் பேசினர். மாவட்ட தலைவராக வேலுசாமி, செயலாளராக கொளந்தசாமி, பொருளாளராக வேலுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டுப்பால் லிட்டர், 45 ரூபாய், எருமைப்பால், 60 ரூபாய் என விலை உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை நிலுவையை உடனடியாக விடுவிக்க வேண்டும். லிட்டருக்கு, 10 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு, ஆவின் பண்ணையை உருவாக்க வேண்டும். கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் முனுசாமி, மாநாட்டை நிறைவு செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ