உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கிராமங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் உற்பத்தி

 கிராமங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் உற்பத்தி

உடுமலை: மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் நாற்றுப்பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீரை அதிகரிக்க, மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீர் நிலைகள், பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில், குளம், குட்டைகள், பொது இடங்கள், மற்றும் பூங்காக்கள், பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஒன்றியத்துக்கான, நாற்றுப்பண்ணை காரத்தொழுவு ஊராட்சியில் அமைக்கப்பட்டு, புங்கன், நாவல், பூவரசு, சரங்கொன்றை, மகா கனி, பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, ஆறு அடி வரை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்ப, மரக்கன்றுகள் தயார் செய்யப்படுகிறது. காரத்தொழுவு நாற்றுப்பண்ணையில், 12 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ