உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொத்துவரி உயர்வால் தொழில் நலிவடையும்

சொத்துவரி உயர்வால் தொழில் நலிவடையும்

திருப்பூர்; தமிழக முதல்வர் தலையிட்டு, சொத்துவரி, தொழில்வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கூட்டமைப்பு தலைவர் முத்துரத்தினம், பொதுசெயலாளர் ஜெயபால், பொருளாளர் கோவிந்தராஜ், துணை தலைவர் சதாசிவம், மேற்கு மண்டல தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது:வணிக பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளதை, மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், சொத்துவரி, தொழில் வரி அபரிமிதமாக உயர்ந்துள்ளதால் குறு, சிறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.திருப்பூரில், மாதம் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு வாடகை வருவாய் பெற்று வந்தவருக்கு, சொத்துவரியாக, ஒன்பது லட்சம் ரூபாய் வந்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வருவாய் பெறும் ஒருவர், ஒன்பது லட்சம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது. இதனை ஏற்க முடியாது.சொத்துவரி, தொழில்வரி, 150 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இதை கண்டிக்க வேண்டிய கட்சியினரும், கூட்டணியில் இருப்பதால் கண்டுகொள்வதில்லை. திருப்பூரில் மட்டும், 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இயங்குகின்றன.கடுமையான வரி உயர்வால், வாடகை உயர்வும் ஏற்படுகிறது; ஏற்கனவே மின் கட்டண சுமையை சுமக்க முடியாத குறு, சிறு தொழில்துறையினருக்கு மீண்டும் சவால் எழுந்துள்ளது.இன்று ரோட்டில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், இனியாவது இது விஷயத்தில் தலையிட்டு, சொத்துவரி, தொழில்வரி மற்றும் குப்பை வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி