உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அவிநாசி : ஈட்டி வீரம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு, நிலமற்ற ஏழை விவசாயி, கூலி வேலை செய்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா கடந்த 1994ல், வழங்கப்பட்டது.ஆனால், இன்று வரை வீட்டுமனை இடங்கள் பெற்ற பயனாளிகளுக்கு சர்வே செய்து கொடுக்காமல் அங்கு குடியிருக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, பயனாளிகளுக்கு வீட்டு மனை இடத்தை அளவீடு செய்து கொடுக்க கேட்டு, மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில், கட்சியினர் அவிநாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து, தகவல் அறிந்த டி.எஸ்.பி., சிவகுமார், தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதில், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நந்தகோபால், உன்னி கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி