உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாறைக்குழியை மூட வலியுறுத்தி மறியல்

பாறைக்குழியை மூட வலியுறுத்தி மறியல்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 41வது வார்டு, முருகம்பாளையம், அண்ணா நகர் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழி உள்ளது.கழிவு நீர் மற்றும் மழை நீரும் சேர்ந்து நீண்ட காலமாக தேங்கி, கடும் சுகாதார கேடு நிலவுகிறது.எனவே, பாறைக்குழியை மூட வலியுறுத்தி நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முருகம்பாளையம் ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று, பொதுமக்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை