உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகைக்கடை முன் போராட்டம்

நகைக்கடை முன் போராட்டம்

காங்கயம்; காங்கயம் சத்யா நகரை சேர்ந்த ராஜ், 48; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சாந்தி, 40. கடந்த, நான்கு ஆண்டு முன், 8.5 சவரன் நகையை, காங்கயம் கடை வீதியில் உள்ள, நகை கடை ஒன்றில் அடமானம் வைத்து, 2.15 லட்சம் ரூபாய் பெற்றார். இதனை பெண்ணின் உறவினர் அன்பழகன் என்பவரிடம் நகைக்கடை உரிமையாளர் பணத்தை பெற்று கொண்டு திருப்பி கொடுத்தார். நகையை பெற்ற அவர், வங்கியில் அடமானம் வைத்து, 3.25 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு தலைமறைவாகியதாக சாந்தி தரப்பினர் குற்றம்சாட்டி நகைக்கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !