உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

காங்கேயம்:இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி விலகக்கோரி, புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில், காங்கேயத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். 13 கோடி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி ஜனநாயக படுகொலை செய்த ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். நிர்வாகி செந்துாரன், கவி, தமிழ்வாணன் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி