மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
14-Jul-2025
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கால் அளவீடு செய்யப்பட்டு, செயற்கை கால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.சக் ஷம் மற்றும் சிகரம் பவுண்டேஷன் இணைந்து கடந்த மாதம் நடத்திய முகாமில், மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு கால் அளவீடு செய்யப்பட்டது. அதன்படி, செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி, தென்னம்பாளையத்திலுள்ள எஸ்.பி., டெக்ஸ் நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சக் ஷம் அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி, சிகரம் பவுண்டேஷன் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சக் ஷம் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம் முன்னிலை வகித்தார்.மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு, மொத்தம், 1.11 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால் மற்றும் காலிபர் இலவசமாக வழங்கப்பட்டது. சிகரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மணி, விநாயகா தம்பி, சக் ஷம் பொறுப்பாளர்கள் முத்துரத்தினம், மாநில நிர்வாகி கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
14-Jul-2025