மேலும் செய்திகள்
ராகுல் பிறந்த நாள் விழா
21-Jun-2025
திருப்பூர்; திருப்பூர் மாநகர மாவட்ட காங்., கமிட்டி சார்பில், அதன் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மாநகர மாவட்ட இளைஞர் காங்., துணைத் தலைவர் சந்தீப், 34வது வார்டு காங்., தலைவர் பொன்னுசாமி தலைமையில், மண்ணரை கிருஷ்ணசாமி கவுண்டர் புஷ்பவதி அம்மாள் நினைவு மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஜோதி, நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பூர் கோன் அட்டை சிறு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், ஒரு சிறுவனின் அறுவை சிகிச்சை செலவுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Jun-2025