மாவட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல்
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 7வது ஆண்டு, மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.ஒவ்வொரு போட்டியிலும் முதல் நான்கு இடம் பிடித்தவர்கள், வரும், 19ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள, 39வது மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 225 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும், விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி, வாவிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம், தலைமை வகித்தார். 'டெக்னோ ஸ்போர்ட்ஸ்' நிர்வாக இயக்குனர் சந்தீப்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துகுமார், டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர் சிவசக்தி, இணை செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வீரர், வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கினர்.