மேலும் செய்திகள்
பாதாளச் சாக்கடை பணிக்காக சிமென்ட் ரோடு உடைப்பு
27-Sep-2024
பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்., நகர் வீதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, வீதிகளில், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பொதுமக்கள் கூறியதாவது:கால்வாய் அமைப்பதற்கு பதிலாக, குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட குழாய்கள் ஒன்றோடொன்று சரியாக இணைக்கப்படவில்லை. கழிவுநீர் செல்வது குறித்து பரிசோதித்துப் பார்க்கையில், பல இடங்களில் கசிந்து செல்கிறது. இதனால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து மேற்கொள்ளும் பணி வீணாகும் அவலம் உள்ளது. கழிவுநீர் அடைத்துக் கொண்டு குழாயில் தேங்கும் அவலமும் உள்ளது. அரைகுறையாக மேற்கொள்ளப்படும் பணியால், மக்கள் வரிப்பணம்தான் வீணாகும். சாக்கடை கால்வாய் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறையான வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
27-Sep-2024