உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை: உடுமலை உழவர்சந்தை ரோட்டில் காலை நேரங்களில், தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகில், உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்கறி வாங்க வருகை தருகின்றனர். காலை நேரங்களில் உழவர்சந்தை முன், தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இக்கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !