பொதுத்தேர்வு மாணவர்கள் சுய விவரம் மாற்ற வாய்ப்பு
திருப்பூர்; வரும், 2025, மார்ச், 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. அதனை தொடர்ந்து பிளஸ் 1, ஏப்ரல் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. பொதுத்தேர்வு ஏற்பாடுகளை தேர்வுத்துறை துவங்கியுள்ளது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இருந்தும், தேர்வு எழுத உள்ளோர், தேர்வு மைய விபரம், மாணவர் சுய விபரம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் தங்கள் இணைப்புடன் வழங்கிய சுய விபரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவரிடம் வழங்க வேண்டும். இன்று முதல் வரும், 22ம் தேதி வரை மாணவர் ஒப்புதலுடன் மாற்றம், திருத்தம் செய்து கொள்ளலாம் என, தேர்வுகள் துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.