உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிற்றிதழ் வெளியீடு

சிற்றிதழ் வெளியீடு

திருப்பூர்: திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய ஞான சபையில் சிற்றிதழ் வெளியீடு நடந்தது. விழாவுக்கு, சங்கப்பொருளாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மங்கைபாரதி பதிப்பகம் நிறுவனர்கள் கந்தசாமி, பத்மாவதி தயாரித்த தகவல்களின் தொகுப்பில் '31 அக். 2025' என்ற சிற்றிதழ் வெளியிடப்பட்டது. சிற்றிதழில் இடம்பெற்ற தமிழ் முதல் பெங்காலி வரை 11 செம்மொழிகள், அவற்றின் சிறப்புகள், தங்கக்கட்டியில் எழுதப்பட்ட தமிழ் இடம்பெற்ற ஆவணக்குறிப்பு, திருப்பூர் குமரன் இடம்பெற்ற புத்தக குறிப்பு, இறப்பு பதிவு புதிய விதிகள் 2025 குறிப்புகள் போன்றவை குறித்து துணை நிர்வாகி ரங்கநாதன் விளக்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ