உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் லீட் பாட திட்டத்தில் தரமான கல்வி

லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் லீட் பாட திட்டத்தில் தரமான கல்வி

'லீட் பாடத்தில், தரமான கல்வி குறைந்த கல்விக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது' என, பல்லடம் - ஆறாக்குளம் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.பள்ளியின் கற்றல் செயல்பாடு குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, ஆறாக்குளத்தில் இயங்கி வரும் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, கடந்தாண்டு, 2023 விஜயதசமியன்று துவங்கப்பட்டது. தற்போது, 175 மாணவர்களுடன், பிரி கேஜி முதல், 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றுள்ளது. விவசாயிகள், நெசவாளர்களின் குழந்தைகள், மிகக்குறைந்த கட்டணத்தில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் இப்பள்ளி செயல்படுகிறது. காற்றோட்டமான வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டு வகுப்பு, ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் யோகா, கராத்தே, சிலம்பம், நடனப்பயிற்சி ஆகியன கற்பிக்கப்படுகின்றன. அனைத்து வழித்தடங்களுக்கும் பஸ் வசதி, நுாலகம், ஆய்வகம் ஆகியவற்றுடன், 'லீட்' பாடத்திட்டத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை