உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி! திட்டமிட்டது 500; பிடிபட்டது 100

தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி! திட்டமிட்டது 500; பிடிபட்டது 100

திருப்பூர் : திருப்பூர் நகரப் பகுதியில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் கடித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் மாநகராட்சியும், தங்கம் மெமோரியல் டிரஸ்ட் தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று துவங்கின.வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று காலை துவங்கிய இப்பணியில் நாய் பிடிக்கும் வாகனத்தில் வந்த ஊழியர்கள் தெரு நாய்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.உடன் வந்த கால்நடை மருத்துவர் இந்த தடுப்பூசியை நாய்களுக்கு செலுத்தினார்.தடுப்பூசி செலுத்தியதற்கான அடையாளமிடப்பட்டு நாய்கள் அதே இடத்தில் விடப்பட்டன. நேற்று ஒரே நாளில் 100 நாய்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்பணியை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவிதா உடனிருந்து பார்வையிட்டார். ஏறத்தாழ 500 நாய்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.இருப்பினும் ஊழியர்களுக்கு தெரு நாய்கள் போக்கு காட்டியது; ஊழியர்களைக் கண்டதும் தப்பி யோடிய தெருநாய்களை விரட்டி பிடிக்க முயற்சித்தது போன்ற காரணங்களால் நேற்று ஒரு நாளில் 100 நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை