ராகு - கேது பெயர்ச்சி பக்தர்கள் வழிபாடு
திருப்பூர்: ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவிலில் நேற்று, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.மீன ராசியில் இருந்த ராகு பகவான், கும்ப ராசிக்கும், கன்னி ராசியில் இருந்த கேது பகவான் சிம்ம ராசிக்கும் நேற்று பெயர்ச்சி அடைந்தனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு, சோழாபுரி அம்மன் கோவிலில், சிறப்பு யாகபூஜைகள் நேற்று நடந்தன.பகல், 12:00 மணிக்கு மஹா சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, வேதிக அர்ச்சனை, 27 நட்சத்திரம், 12 ராசிக்கு சிறப்பு மூலமந்திர ேஹாமம், மஹா பூர்ணாகுதி, கலச அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ராகு மற்றும் கேதுவுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ராசிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேற்று பரிகாரபூஜை செய்து, ராகு கேதுவை வழிபட்டனர்.