உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்!

நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்!

திருப்பூர்: கனமழை பெய்யும் நாட்களில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் குளம் போல் தண்ணீர் தேங்குவதாக, குள்ளேகவுண்டன்புதுார் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மாநகராட்சியின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருவதால், மங்கலம் ரோட்டில், மாநகராட்சி எல்லையில் ரோடு பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.பழுதாகும் போது, 'பேட்ஜ் ஒர்க்' செய்து சமாளித்து வருகின்றனர். லிட்டில்பிளவர் கான்வென்ட் பஸ் ஸ்டாப்பில் இருந்து, குளத்துக்கடை செல்லும் ரோட்டில், பேட்ஜ் ஒர்க் செய்ததால் சிரமம் குறைந்துள்ளது.இருப்பினும், சிறிய மழை பெய்தாலும், மழைநீர் செல்ல இடமில்லாமல் ரோட்டிலேயே குளம் போல் தேங்கி அச்சுறுத்துகிறது. ரோட்டில் குழிகள் இருக்கும் இடம் தெரியாமல், மழைநீர் தேங்கி நிற்கும் போது, 'டூ வீலரில்' சென்று வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டின் இருபுறங்களையும் மூடி தண்ணீர் நிற்பதால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிந்து செல்ல வழித்தடங்களை கண்டறிய வேண்டும்.அதிகமாக தண்ணீர் தேங்கும் போது, அருகே உள்ள வீடு மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் ரோட்டில் தேங்காமல் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் குளம் போல் தேங்குவதால், ரோடு விரைவில் சேதமாகிவிடும். எனவே, நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் மழைநீர் தேங்காமல் வடிய, உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ