உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராஜா நேஷனல் மெட்ரிக் பள்ளி தடகள போட்டியில் தொடர் சாதனை

ராஜா நேஷனல் மெட்ரிக் பள்ளி தடகள போட்டியில் தொடர் சாதனை

திருப்பூர்;நடப்பு கல்வி ஆண்டுக்கான பல்லடம் குறுமைய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர் சாதனை படைத்தனர். இப்பள்ளி மாணவி சலோமி, 14 வயது பெண்கள் பிரிவில் குண்டு எறிதல் மற்றும் வட்டெறிதல் போட்டியில் முதலிடம், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். 14 வயது பிரிவு, உயரம் தாண்டுதலில் ஜெயமதிவதனி முதலிடம், குண்டு எறிதலில் பரணி இரண்டாமிடம், உயரம் தாண்டுதலில் குருதர்ஷன் இரண்டாமிடம் வென்றனர். பெண்களுக்கான 14, 19 வயது பிரிவு கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் இப்பள்ளி அணி இரண்டாமிடம், 17 வயது ஆண்கள் கைப்பந்து போட்டியில் இரண்டாமிடம், 19 வயது ஆண்கள் கைப்பந்து போட்டியில் முதலிடமும் பெற்றனர். திருப்பூர் தடகள சங்கம் சார்பாக நடைபெற்ற தடகளப் போட்டியில் 14 வயது பிரிவில் சலோமி தனிநபர் சாம்பியன்ஷிப்பும், 18 வயது பிரிவில் குருதர்ஷன் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் முதல்வர் கலராணி, தாளாளர் ராஜகுமார், செயலர் ஹரிபிரசாத், உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை