உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராஜிவ் நினைவு தினம்; காங்கிரசார் அஞ்சலி

ராஜிவ் நினைவு தினம்; காங்கிரசார் அஞ்சலி

அவிநாசி; அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு தெற்கு வட்டார காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.தெற்கு வட்டாரத் தலைவர் கொங்கு தங்கமுத்து தலைமை வகித்தார். நகர தலைவர் கோபால்சாமி முன்னிலை வகித்தார். திருமுருகன்பூண்டி நகர தலைவர் அசோக், வடக்கு வட்டார தலைவர் லட்சுமண சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.l அவிநாசி நகர காங்., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் முன் ராஜிவ் படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். வக்கீல் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர் மணி, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாணிக்கம், நகராட்சி கவுன்சிலர் கருணாம்பாள், முன்னாள் நிர்வாகிகள் சந்திரசேகர், பொன்னுக்குட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை