உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரிய வானியல் நிகழ்வு; காண்பதற்கு ஏற்பாடு

அரிய வானியல் நிகழ்வு; காண்பதற்கு ஏற்பாடு

உடுமலை; வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் உள்ளிட்ட ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் சீரமைத்து அணிவகுக்கும் நிகழ்வை, பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.இந்த வானியல் நிகழ்வை, உடுமலையில் பொதுமக்கள் காண்பதற்கு கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை, 31ம்தேதி மாலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, காந்திநகர் அருகே செல்லம் நகரில், பெற்றோர், பொதுமக்கள், தொலைநோக்கி வழியாக இந்த நிகழ்வை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், இந்த அரிய வானியல் நிகழ்வை காண்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, கலிலியோ அறிவியல் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ