ரேஷன் குறை தீர்க்கும் முகாம்
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம், இன்று காலை, 10:00 மணி முதல், ஒரு மணி வரை உடுமலை, பெரியபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடக்கிறது. மடத்துக்குளம் தாலுகாவிற்கு, பாலப்பம்பட்டியிலுள்ள, மைவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும் நடைபெறுகிறது. இம்முகாமில், ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு மற்றும் மாற்றும் செய்தல், ரேஷன் கார்டு நகல், புதிய ரேஷன் கார்டு கோரிய விண்ணப்பங்கள் வழங்கி பயன்பெறலாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.