ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
திருப்பூர்; முத்துார் அருகே, 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை, போலீசார் கைது செய்தனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு, முத்துார் - காங்கயம் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பிரியதர்ஷினி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த ஒரு காரை சோதனையிட்ட போது, 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில், அந்நபர் காங்கயம் பகுதியை சேர்ந்த தங்கராஜ், 52, வெள்ளகோவில், வேலம்பாளையம், மங்கலப்பட்டி சுற்றுப்பகுதி மக்களிடம், ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநில தொழிலாளருக்கு அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், தங்கராஜை கைது செய்து, 1,050 கிலோ அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.