ரேஷன் கடைகளுக்கு கழிப்பிட வசதி தேவை
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகக்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீடுதேடி சென்று ரேஷன் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்ட குளறுபடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள சாக்குபைகளை தரம் பிரிக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும். ரேஷன் கடைகளுக்கு, கழிப்பிட வசதியை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ரேஷன் பொருட்களை, சரியான எடையில் அனுப்ப வேண் டும். வெளி மாவட்ட, வெளி மாநில கார்டுதாரர்களுக்கு பொருள் வழங்க, கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பணியின் போது இறந்த பணியாளர் வாரிசு களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.