மேலும் செய்திகள்
பிரதிபலிப்பான் அமைக்கணும்
09-Aug-2025
உடுமலை, ; அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் பொருத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v90h1kxh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இப்பாலத்தில், இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
09-Aug-2025