மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
திருப்பூர், : ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ.ஜி.இ.பி., என்ற அரசு சாரா பொது அமைப்பு, ஜெர்மனியின் முன்னணி வர்த்தக நிறுவனம் 'கே.ஐ.கே.,' ஆகியவை, ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து, 'முத்துக்கள் கபே' என்ற, பெண்களுக்கான அமைப்பு நேற்று துவங்கப்பட்டது.ஐ.ஜி.இ.பி., இயக்குனர் சாரதா, கே.ஐ.கே., வர்த்தக நிறுவன தலைவர் ஜாக்குலின் தல்மான் பங்கேற்றனர். குழந்தைகள் உரிமைக்கான தேசிய கமிஷன் முன்னாள் தலைவர் பிரியங்கா கனுங்கோ, பொதுநல அமைப்பின் தலைவர் டீட்ரிச் கெப்சுல் ஆகியோர், காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.ஏற்றுமதியார்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோவன், பொதுச் செயலாளர் திருக்குமரன், வணிக ஊக்குவிப்பு பிராண்ட் கமிட்டி தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.குழந்தைகள் உரிமைக்கான தேசிய கமிஷன் முன்னாள் தலைவர் பிரியங்கா கனுங்கோ பேசுகையில், ''திருப்தியான தொழிலாளி அல்லது மகிழ்ச்சியான பணியாளர் என்ற வகையில், செயல்திறனை அதிகரிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலமாக, பணியின் முடிவு சிறப்பாக இருக்கும். நிதிஅறிவு, வழிகாட்டுதல், சட்டம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், பெண்கள் 'கபே' சரியான இயங்கு தளமாக இருக்கும்,'' என்றார்.கே.ஐ.கே., சமூக இணக்கத்தின் தலைவர் ஜாக்குலின் தல்மான் பேசுகையில்,''இந்தியா வியாபார யுத்திகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் அவர்களின் அன்றாட நடைமுறைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதற்காக, பெண்கள் 'கபே' சரியான வழிகாட்டுதலை வழங்கும்,'' என்றார்.ஐ.ஜி.இ.பி., இயக்குனர் சாரதா மற்றும் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் பேசினர்.
10-Dec-2024