மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
16-May-2025
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக, 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த டாக்டர் விஜயலலிதாம்பிகை, தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நியமன அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் வட்டார அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக பணியாற்றி வந்த பாலமுருகன் (வெள்ளகோவில் வட்டாரம்) கும்பகோணத்துக்கும், தங்கவேலு (திருப்பூர் வடக்கு வட்டாரம்) கோவை மாநகராட்சிக்கும், விஜயகுமார் (உடுமலை வட்டாரம்) பழனிக்கும், சிரஞ்சீவி (தாராபுரம் வட்டாரம்) சின்னமனுார் பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு பதிலாக, கோவை மாநகராட்சியில் இருந்து பாலசுப்ரமணி, நரசிம்மன், ராமச்சந்திரன், கரூரில் இருந்து மதுரைவீரன் ஆகியோர் திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
16-May-2025