முக்கிய ரோடுகளில் சீரமைப்பு நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
உடுமலை, குண்டும், குழியுமான மாவட்ட முக்கிய ரோடுகளில், மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், வடகிழக்கு பருவமழைக்கு முன், பாலங்கள் பராமரிப்பு, வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மாவட்ட முக்கிய ரோடுகளில், பராமரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.குறிப்பாக, குண்டும், குழியுமாக இருந்த ரோடுகளில், 'பேட்ஜ் ஒர்க்', செய்து சீரமைத்து வருகின்றனர். அவ்வகையில், அமராவதி சர்க்கரை ஆலை முதல் கொங்கலக்குறிச்சி வரையுள்ள, ரோட்டில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.இதர ரோடுகளிலும், பருவமழை துவங்கும் முன் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.