உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அப்போது; ரூ. 2.27 கோடியில் அல்லாளபுரம் ரோடு ஆமை வேகத்தில் அகலமாக்கும் பணி

வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அப்போது; ரூ. 2.27 கோடியில் அல்லாளபுரம் ரோடு ஆமை வேகத்தில் அகலமாக்கும் பணி

திருப்பூர்; திருப்பூர், பல்லடம் ரோடு வீரபாண்டி பகுதியிலிருந்து அல்லாளபுரம் வழியாக பொங்கலுார் சென்று சேரும் ரோடு உள்ளது. பல்லடம் ரோட்டையும், திருச்சி ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டையும் சென்று சேரும் வகையில் இந்த ரோடு உள்ளது. இதனால், இந்த ரோட்டில் அதிகளவிலான வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது.கிராமப் பகுதிகளை இணைக்கும் ரோடு என்பதால், 5.5 மீ., அகலத்தில் மட்டுமே இந்த ரோடு அமைந்துள்ளது. சில இடங்களில் ஓடைகள் ரோட்டைக் கடந்து செல்கின்றன. இந்த இடங்களில், தரைமட்டப் பாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ரோட்டை அல்லாளபுரம் அருகே, 2.5 கி.மீ., துாரத்துக்கு, 5.5 மீ., அகலம் என்பதை, 7 மீ., ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டது. மேலும், வழியில், 5 இடங்களில் சிறுபாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.இப்பணி, 2.27 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறு பாலம் கட்டும் இடங்களில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு, அருகேயுள்ள விவசாய நிலம் மற்றும் காலி இடங்கள் வழியாகச் சென்று வருகின்றன. இந்தப் பணிகள் மந்தகதியில் நடப்பதால், விரைந்து பணிகளை செய்து முடித்து வாகனங்கள் பாலம் வழியாகச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில் 'பாலம் மற்றும் ரோடு பணி உரிய வகையில் நடக்கிறது. பிப்., மாதத்துக்குள் இது முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளுக்குள் பணி முடிந்து ரோடு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.---அல்லாளபுரம் - பொலிக்காளிபாளையம் ரோட்டில் மந்தமாக நடக்கும் பாலம் கட்டுமான பணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ