உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கம்பங்களில் விளம்பர பதாகை அகற்றம்

மின் கம்பங்களில் விளம்பர பதாகை அகற்றம்

திருப்பூர்: நகரப்பகுதியில் தெரு விளக்கு மின் கம்பங்களில் இருந்த விளம்பர பதாகைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி சார்பில், பிரதான ரோடுகளில மையத் தடுப்புகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் ரோட்டோரங்களிலும் மின் விளக்குகள் மின் கம்பங்கள் அமைத்து அதில் பொருத்தப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பர பதாகைகளை கட்டி வைத்துள்ளன. கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிறுவன விளம்பர தட்டிகளை இதில் கட்டி வைப்பது வழக்கமாக உள்ளது.இந்த விளம்பர தட்டிகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதாக அமைகிறது. மேலும், காற்றில் பறந்து சில சமயங்களில் இவை ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி விடுகிறது.இது குறித்த புகார்களின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் இது போல் மின் விளக்கு மற்றும் மின் கம்பங்களில் கட்டியுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. அவ்வகையில் தாராபுரம் ரோட்டில் உள்ள தெரு விளக்கு மின் கம்பங்களில் கட்டியிருந்த விளம்பர தட்டிகளை ஊழியர்கள் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ