உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் புனரமைப்பு

அவிநாசி கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் புனரமைப்பு

அவிநாசி; அவிநாசி - கோவை ரோட்டில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 1.8 ஏக்கர் பரப்பிலான கருணாம்பிகை திருமண மண்டபம், அவிநாசியப்பர் திருமண மண்டபம் ஆகியன உள்ளன. அவிநாசியப்பர் மண்டபம் 56 லட்சம் ரூபாய்; கருணாம்பிகை அம்மன் மண்டபம் 99 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இரு மண்டபங்களிலும் வரவேற்பு வளாகத்தில் சிமென்ட் ஷீட்கள் பிரிக்கப்பட்டு, கலர் ரூபிங் ஷீட்கள் வேயப்பட உள்ளன. மண்டபம் முழுவதும் பெயின்ட் அடித்தல், மின்சாதன பொருட்களை மாற்றம் செய்தல், உள் அரங்கில் ஸ்பான்ச் வைத்த அலுமினிய பிரேமுடன் ஒட்டப்பட்ட ரூபிங் ஷீட்கள் வேய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ''அறநிலையத்துறையின் கீழ் நடைபெறும் மராமத்து பணிகள் முடிந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இரு திருமண மண்டபங்களையும் திருமணம், சீர், வளைகாப்பு மற்றும் இதர சுப காரியங்களுக்காக முன் பதிவு செய்து விழாக்களை நடத்தி பயன்பெறலாம்'' என்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை