குடியரசு தின விழா ஒத்திகை; 965 மாணவியர் பங்கேற்பு
திருப்பூர்; திருப்பூரில் நடக்கவுள்ள குடியரசு தின விழா கலைநிகழ்ச்சியில் ஆறு பள்ளிகளை சேர்ந்த, 965 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.வரும், 26 ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் கலெக்டர் கொடியேற்றி, தியாகிகளை கவுரவிக்கிறார். முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முழுதும் இருந்து தலா மூன்று அரசு மற்றும் தனியார் பள்ளி என, ஆறு பள்ளிகளை சேர்ந்த, 965 மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இன்றும், நாளையும் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.