உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுகோள்

கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுகோள்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:எங்கள் வார்டிலுள்ள ரங்கநாதபுரத்தில், ஆயிரத்து 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 10 வீதிகள் உள்ளன. இவற்றுக்கு உப்புத் தண்ணீர் பயன்பாட்டுக்கு ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டுமே உள்ளது.அதிலிருந்து அப்பகுதி மக்களுக்கு காலையில் ஐந்து வீதிகளுக்கும் மாலையில் ஐந்து வீதிகளுக்கும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, வெயில் காலம் என்பதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அப்பகுதியில் வேலைக்கு செல்லும் பொது மக்கள் மாலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால், மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதிக்கு கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, அதற்கு புதிய சின்டெக்ஸ் டேங்க்கும் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ