உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீரன் சின்னமலை பஸ் ஸ்டாண்ட் பெயர்ப்பலகை திறக்க வேண்டுகோள்

தீரன் சின்னமலை பஸ் ஸ்டாண்ட் பெயர்ப்பலகை திறக்க வேண்டுகோள்

திருப்பூர்; திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்டமாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான தீர்மானம் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டு, அரசின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.மாநகராட்சி தீர்மானத்தின் படி, தீரன் சின்ன மலை பெயர் சூட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டில் இது வரை அதற்கான பெயர்ப் பலகை அமைக்கப்படாமல் உள்ளது.வரும் ஆடி மாதம் 18ம் தேதி, தீரன் சின்னமலையின் 200வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்நாளில், பஸ் ஸ்டாண்டில் தீரன் சின்னமலை பஸ் ஸ்டாண்ட் என்பதற்கான பெயர்ப் பலகையை அமைத்து திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொ.ம.தே.க., நகர பொருளாளர் செல்வகுமார், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி மற்றும் கம்யூ., தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர் பொதுமக்கள் சார்பில் இது குறித்த மனுவை, மேயர் தினேஷ்குமாரிடம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை