உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோர கடைகளை முறைப்படுத்த கோரிக்கை

சாலையோர கடைகளை முறைப்படுத்த கோரிக்கை

அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோட்டில் சூளை பகுதியில் இருந்து அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, சாலையோரத்தில், 300-க்கும் மேற்பட்ட கடைகள் புதியதாக முளைத்துள்ளது. இதனால் பல வகையில் வணிகர்களும் வியாபாரிகளும் பெரும் சிக்கலை தருவதாக, வணிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.இது தெடார்பாக, கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக, பேரூராட்சி நிர்வாகம், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் உறுதி அளித்தனர்.ஆனால், அதன்படி எதுவும் நடக்கவில்லை என்றும், அரசு தரப்பில் உறுதியளித்தபடி சாலையோர கடைகளை முறைப்படுத்தி தர கேட்டு நேற்று அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் சார்பில், தாசில்தார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை