உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

உடுமலை; உடுமலையிலிருந்து சென்னை, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை அமைந்துள்ளது. உடுமலை வழியாக, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், கோவை - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.மேலும், மக்கள் அதிக அளவில் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.அவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். எனவே, கோவை, பாலக்காட்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை