உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு கோரிக்கை

சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு கோரிக்கை

உடுமலை: கிராம ஊராட்சிகளில், பயன்பாடில்லாத சுகாதார வளாக கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்தென சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையான ஊராட்சிகளில், சுகாதார வளாகம் முழுவதும் புதர் படிந்த பகுதிகளிலும், பயன்பாடில்லாமல், சேதமடைந்த கட்டடமாகவும் உள்ளன.கிராம ஊராட்சிகளில் தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் இருப்பினும், பலரும் பொதுசுகாதார வளாகத்தை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அந்த கட்டடங்கள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, சேதமான சுகாதார வளாகங்களை புதுபித்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்கு அறிவிக்கப்பட்டது.ஆனாலும், பல ஊராட்சிகளில் சுகாதார வளாகங்கள் புதர் மண்டிய இடங்களிலும், தண்ணீர் வசதி இல்லாத வளாகங்களாகவும் தான் உள்ளன. இவற்றை ஊராட்சி நிர்வாகங்களும் கண்டு கொள்ளாமல் உள்ளன.கிராமங்களின் சுகாதார வளாகங்களை புதுப்பிக்கவும், பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்கும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !