விதை பரிசோதனை மையத்தில் ஆய்வு
பல்லடம்,;பல்லடத்தில், விதை பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கோவை மாவட்ட விதை பரிசோதனை நிலைய அலுவலர் நர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, விதை பரிசோதனை நிலையத்தில் உள்ள உபகரணங்களின் செயல்பாடுகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். விதையின் தரம் அறிந்திடும் பரிசோதனைகள் மற்றும் பகுப்பாய்வு முறைகள் உள்ளிட்டவை இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உடனுக்குடன் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்குத் தரப்படும் சான்று விதைகளை முன்னுரிமை அடிப்படையில் பகுப்பாய்வு செய்து முடிவுகளை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, வேளாண் அலுவலர் வளர்மதி உடன் பங்கேற்றார்.