நெடுஞ்சாலையில் நீர்த்தேக்கம்
பல்லடம் அடுத்த டி.கே.டி., மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து கணபதிபாளையம் செல்லும் ரோடு, கணபதிபாளையம், சிங்கனுார் வழியாக பொங்கலுாரை இணைக்கிறது. பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் வழித்தடம் என்பதுடன், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் இதனுடன் இணைகிறது. இந்த ரோட்டின் பல இடங்கள் மேடும் பள்ளமுமாக உள்ளது. தாழ்வான இடங்களில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள், தண்ணீரில் தத்தளிக்கின்றனர். சாலை சீரமைக்கப்பட வேண்டும்.