மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
30-Jun-2025
உடுமலை; நான்காம் மண்டல பாசன கால்வாய்களை உடனடியாக துார்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் பெதப்பம்பட்டியில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜகோபால், சி.ஐ.டி.யு., ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.குடிமங்கலம் பகுதியில், நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசன கால்வாய்களை துார்வாரி, கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவராக தங்கவடிவேலன், ஒன்றிய செயலாளராக விஜயகுமார், ஒன்றிய பொருளாளராக மோகனசுந்தரம் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் குமார் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.
30-Jun-2025