ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்
உடுமலை; உடுமலையில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம், அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. ஓய்வு பெற்ற எஸ்.பி., க்கள் மாணிக்கம், ஞான பாண்டியன் தலைமை வகித்தனர். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.,க்கள் ஆறுமுகம், அம்மாதுரை முன்னிலை வகித்தனர். இதில், புதிய நிர்வாகிகளாக, தலைவர் எஸ்.ஐ., ஓய்வு ரங்கராஜ், துணைத்தலைவராக ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஆறுமுகம், செயலாளராக வெங்கிடுபதி, இணை செயலாளராக செல்வம், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காவல் துறை, வனத்துறை, தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.