உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் சாகுபடி; இன்று ஆலோசனை

நெல் சாகுபடி; இன்று ஆலோசனை

உடுமலை : அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், குறுவை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.கடந்த பருவத்தில் நெல் சாகுபடியில் பல்வேறு சிக்கல்கள், நோய்த்தாக்குதலால் விவசாயிகள் பாதித்த நிலையில், நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடிக்கு முன் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம், இன்று மதியம், 12:00 மணிக்கு, கணியூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.நடப்பு ஆண்டு குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள உள்ள விவசாயிகளுக்கு, குறுவை நெல் சாகுபடி தொகுப்பாக, நெல் மற்றும் இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, ரூ.4 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.மானிய திட்டங்களில் பயன்பெற, விவசாயிகள், சிட்டா நகல், ஆதார் நகல், போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 97877 79884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை